இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'சுப்பிரமணியபுரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விரைவில் வெளிவர இருக்கும் 'வட கறி' படங்களின் நாயகி சுவாதியைப் பற்றிய திருமண செய்தி தெலுங்குத் திரையுலகத்திலும், மீடியாக்களிலும் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை என சுட்டெரிக்கும் விதமாக கோபத்துடன் பதிலளித்துள்ளார் சுவாதி.
அவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக யாரோ செய்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். கோடை வெயிலில் அந்த செய்தி கபகபவென பற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் கடும் கோபமடைந்த சுவாதி அவராகவே விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
“என்னைப் பற்றிய திருமண வதந்திகளுக்கெல்லாம் நான் திரைப்படங்களில் எப்படியிருக்கிறேனோ அதைப் போன்றேதான் பதிலளிக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட தொழிலதிபர் யாரையும் சந்திக்கவில்லை, பழகவுமில்லை. இதைப் பத்தி கேக்கறதுக்கு நல்லா இருக்கு, ஆனால் துளி கூட உண்மையில்லை. இந்த கதையை இதோட முடிச்சுக்குங்க,” என கூறியிருக்கிறார்.
அழகா இருக்கிற ஹீரோயின்களுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கிற செய்தியை யாரு பரப்புறாங்கன்னு தெரியலை. சுவாதி ஹீரோயினாக நடிக்கும் 'வட கறி, கார்த்திகேயன்' ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.
அது என்னமோ தெரியலை ஜெய் கூட நடிக்கிற ஹீரோயின்களப் பத்திதான் இப்படி திருமண செய்திலாம் வருது. பார்ட்டி பரபரப்புக்கு ஏதாச்சும் கிளப்பி விடுகிறாராரோ…..