'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் வேலு பிரபாகரனின் உதவியாளர் வெங்கட்ரமணன். பல தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். 53 வயதாகும் வெங்கட்ரமணன் அப்பா வேணாம்ப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவருடன் ஜெயா மணவாளன், டாக்டர் சிவசுப்பிரமணியன், சங்கர், மதுமிதா மாஸ்டர் விஜய் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.கே.கண்ணன் இசை அமைத்துள்ளார்.
53 வயதில் ஹீரோவானது பற்றி வெங்கட்ரமணன் கூறியதாவது: நாட்டில் இன்றைக்கு குடிநோயாளிகள் பெருகி விட்டனர். சிறிதாக ஆரம்பித்த பழக்கம் புற்றுநோய்போல ஒரு குடும்பத்தையே அழிக்கிறது. இதை படமாக எடுக்க விரும்பினேன். குடிநோயாளிகள் எப்படி உருவாகிறார்கள், எப்படி வாழ்க்கிறார்கள் எப்படி அழிகிறார்கள் என்பதுதான் கதை. நான் ஹீரோ என்று சொல்வதை விட கதையின் நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். 53 வயது வரை குடிநோயாளியாக இருந்தவன் ஒரு தான்னார்வ அமைப்பின் மூலம் திருந்துகிறான். ஆனால் அவன் திருந்தியதை நம்பாமல் குடும்பம் துரத்தி அடிக்கிறது. பிறகு அவன் கதி என்ன? என்பதுதான் கதை" என்கிறார்.