இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஈ, ஆடுகளம், மவுனகுரு படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த தினேஷ், அட்டக்கத்தி படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார். மீண்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தானா என்ற கவலையுடன் இருந்தவருக்கு கிடைத்தது குக்கூ படம். அந்த படத்தில் பார்வையற்றவராக நடித்த கேரக்டர் பரபரப்பாக பேசப்படவே இப்போது பிசியான நடிகராகிவிட்டடார்.
வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைகள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. இதைத் தவிர திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 2015 இறுதி வரைக்கும் தினேஷ் கால்ஷீட் டயரி நிறைந்து விட்டது.