விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகியாக 1994ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாட விரும்பிய அவர் மும்பையில் உள்ள புற்றுநோய் மறுவாழ்வு மையத்திற்கு சென்று அங்குள்ள புற்று நோய் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுடன் கொண்டாடினார். அவர்களுக்கு இனிப்பும், பரிசு பொருட்களும் கொடுத்ததோடு, அவர்களுடன் கண்ணாமூச்சி, திருடன் போலீஸ் விளையாட்டும் விளையாடியபடி சில மணி நேரத்தை செலவிட்டார்.
"நான் எப்படி தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும், எப்படி உற்சாகமாக வாழ வேண்டும் என்பதையும் இந்தக் குழந்தைகளிடம்தான் கற்றுக் கொள்கிறேன். அதனால்தான் அவர்களுடன் சேர்ந்த இந்த நாளை கொண்டாடினேன்" என்கிறார் சுஷ்மிதா சென்.