ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் படங்கள் கன்னட இளம் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு பிடிச்சிருந்ததாம். "எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க கன்னடத்துல பண்ணலாம்" என்று அவரே போன் பண்ணி சரவணனிடம் கேட்க. அவருக்கு ஏற்ற மாதிரியும், கன்னட ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரியும் ஒரு கதையை ரெடிபண்ணிவிட்டு பெங்களூருக்கு சென்று கதையை சொல்லி வந்திருக்கிறார் சரவணன்.
கதையும் புனித் ராஜ்குமாருக்கு பிடித்து விட கணிசமான தொகையை அட்வான்சாக கொடுத்துவிட்டு "ஹீரோயினை மட்டும் நான் முடிவு பண்ணிக்கிறேன். மற்ற ஏற்பாட்டை நீங்க கவனிங்க"ன்னு சொல்லி அனுப்பியிருக்கிறார். தயாரிப்பாளரும் புனித் ராஜ்குமார்தான். ஹீரோயின் அனேகமாக த்ரிஷாவா இருக்கலாம் என்கிறார்கள்.
"புனித் ராஜ்குமாரை சந்தித்து கதை சொல்லி இருக்கிறேன். இவன் வேற மாதிரியின் ரீமேக் அல்ல. புதிய கதை. மற்ற விபரங்கள் எதுவும் பேசவில்லை எல்லாம் முடிவானதும் முறைப்படி சொல்கிறேன்" என்கிறார் சரவணன்.