இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை விட ஹிட் லிஸ்ட் ஹீரோக்களுடன் நடிக்கும்போதுதான் நடிகைகளின் மார்க்கெட்டும் உயர்கிறது என்று கூறும் ஹன்சிகா, இனிமேல் ஹிட் படங்களை கொடுத்து வரும் ஹீரோக்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.
குறிப்பாக, சேட்டை படத்தின் தோல்விக்குப்பிறகு நடித்த சிங்கம்-2, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்கள் வெற்றியால், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வந்த நேரத்தில் இப்போது மான்கராத்தே படமும் 50 நாட்கள் ஓடி ஹிட் படமாகியிருப்பதால் உற்சாகத்தில் துள்ளிக்குதித்துக கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
இந்த வெற்றியை கொண்டாடி மகிழ, சிலரைப்போன்று உடனடியாக அவர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யவில்லை. மாறாக, தான் தத்தெடுத்துள்ள பிள்ளைகளை சந்தித்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அந்த மாதிரி பிள்ளைகளுடன் சந்தோசத்தை கொண்டாடும்போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அந்த சந்தோசத்துக்கு இணை எதுவுமே இல்லை என்கிறார் ஹன்சிகா.