தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
9ம் வகுப்பு படித்தபோதே கும்கி படத்தில் நடித்தவர் கேரளத்தைச்சேர்ந்த லட்சுமிமேனன். அந்த படத்தில் குடும்பப்பாங்காக நடித்த அவர் பின்னர் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என வரிசையாக அதே கிராமிய மணம் மாறாமல் நடித்தார். ஆனால் விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் என்ட்ரி கொடுத்தபோதுதான் அவரது கேரியரே மாறியது.
அந்த படத்தில குத்துப்பாட்டு நடிகைகள் போன்று குத்தாட்டம் போட்ட லட்சுமிமேனன், அதே விஷாலுடன் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில லிப்லாக் காட்சியிலும் நடித்து தனது குடும்ப இமேஜை உடைத்தெறிந்தார். அதோடு, விஷாலுக்கு மட்டும் இந்த சலுகை இல்லை. கதைக்கு அவசியம் என்றால் இனி முத்தக்காட்சிகளில் நடிப்பேன் என்றும் ஸ்டேட்மென்ட் விட்டார்.
அதையடுத்து, கதைகளுடன் அவரை முற்றுகையிட்ட மேலும் சில டைரக்டர்களும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த, அப்படியென்றால் கூடுதலாக 10 லட்சம் கொடுங்கள் ஜமாய்ச்சிடுவோம் என்று லட்சுமிமேனன் சொன்னார். அதற்கும் உடன்பட்டு சில படாதிபதிகள் லட்சுமிமேனனை புக் பண்ணியுள்ளனர்.
ஆனால் இந்த நேரத்தில, சில ஹீரோக்கள் லட்சுமிமேனனுக்கு போன் போட்டு, உன்னை ஒரு முத்தம் கொடுக்கக்கூட 10 லட்சம் கேட்குறியாமே. அத்தனை காஸ்ட்டிலியா நீ என்று கலாய்க்கிறார்களாம். இதனால் கடுப்பில் இருக்கும் லட்சுமிமேனன், என் முத்தம் காஸ்டிலியானதுன்னுதானே 10 லடசம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர்றாங்க அப்புறமென்ன உங்களுக்கு சந்தேகம் என்று வெடுக்கென்று பேசிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறாராம்.