‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இந்திய அளவிலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் “கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,” தேசிய விருது பெற்ற 'காஞ்சீவரம்' ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்து சென்ற ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது தமிழிலும், மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறாராம். தமிழ்ப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், மலையாளப் படத்தில் ஃபகத் பாசிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
பிரகாஷ்ராஜ், ஷம்மு நடித்து பிரியதர்ஷன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த 'காஞ்சீவரம்' படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், அந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஏறக்குறைய ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் படத்தை இயக்க உள்ளார் பிரியதர்ஷன்.