பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
கார்டியன் என்ற அமைப்பு 2013ம் ஆண்டின் நிலவரப்படி ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் வாங்கும் சம்பளம், அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் அடிப்படையில் டாப் டென் பணக்கார நடிகர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் ஷாருக்கான். அவரிடம் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. அதாவது 3500 கோடி. முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெர்ரி ஜென்பில்டு. அவர் 820 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்து வைத்திருக்கிறார். அதாவது 4 ஆயிரத்து 792 கோடி.
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 3 வது இடத்திலும், டெய்லர் பெர்ரி 4வது இடத்திலும், டீப் 5வது இடத்திலும் உள்ளனர். ஜேக் நிக்கல்சன், டோம் கேங்கஸ், கிளிண்டன் ஈஸ்ட்வுட் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் ஷாருக்கான் அடிப்படையில் ஒரு டி.வி.நடிகர். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 90 சதவிகித படங்கள் வெற்றிப் படங்களே. கடைசியாக நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சினிமாவில் சம்பாதித்தை விட கூடுதலாக விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்துள்ளார். மும்பை, டில்லி, லண்டன், துபாயில் ஆடம்பரமான பங்களாக்கள் வைத்துள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகள் வைத்திருக்கிறார்.