சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பழம்பெரும் பாடலாசியர் புலமை பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசவை கவிஞராகவும் இருந்தார். இவரது பேரன் திலீபன் புகழேந்தி, 'எவன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் தீப்தி மானே ஹீரோயினாக நடிக்கிறார். பிரபல பாடகி உஜ்ஜெனி ராய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கருப்பசாமி குத்தகைதாரர், கோலிசோடா படத்தில் உதவி இயக்குனாராக பணியாற்றிய கே.எம்.துரைமுருகன் இயக்குகிறார். ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சசிதரன் இசை அமைக்கிறார்.
"இது வித்தியாசமான காதல் கதை. அம்மா மீது வெறித்தனமான பாசம் கொண்ட மகனை காதலிக்கிறார் ஹீரோயின். எங்க அம்மா காதலுக்கு ஒத்துக்கணும் என்பார் ஹீரோ. ஹீரோவுக்கு மனைவியாவதற்கு முன்பே மாமியாருக்கு எப்படி நல்ல மருமகள் ஆகிறார் என்பதுதான் கதை. காதலையும் குடும்ப உறவுகளையும் அழகாக சொல்கிறோம். ஹீரோ திலீபன் அடிப்படையில் பைக் ரேசர் அதனை அப்படியே பயன்படுத்தி இருக்கிறோம். இந்தி படகி உஜ்ஜெனி ராய் அம்மாவாக நடித்திருக்கிறார். கிளிசரின் போடாமலே கண்ணீர் விட்டு கதறி அழுகிற காட்சியெல்லாம் உண்டு. கானா பாலா பாடிய "சீ போ நாயே பொறுக்கி..." என்ற பாடல் ஹிட்டாகி உள்ளது" என்கிறார் இயக்குனர் கே.எம்.துரைமுருகன்.