நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படமான கோச்சடையான் வருகிற 23ந் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. 6 ஆயிரம் பிரிண்டுகள் போடப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கான முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
ஆனால் ரிலீசாகும் அனைத்து தியேட்டர்ளிலும் முன்பதிவு தொடங்கப்பட வில்லை. சென்னையில் சில குறிப்பிட்ட மால் தியேட்டர்கள் தவிர மற்றவைகளில் நேற்று வரை முன்பதிவு தொடங்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்கள் முன்பதிவை தொடங்கவில்லை.
"கோச்டையான் படத்திற்காக வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியதற்கான உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே படம் 23ந் தேதி ரிலீசாகும். அந்த உத்தரவாதம் இன்றுவரை (மே 20) வரை கிடைக்கவில்லை. அப்படி கிடைக்காத பட்சத்தில் 23லும் கோச்சடையான் ரிலீசாவதில் சிக்கல் இருக்கிறது. முன்பதிவு செய்து விட்ட பின்னர் அதை திருப்பிக் கொடுப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கிறது. அதனால்தான் முன்பதிவை தொடங்கவில்லை. 21ந் தேதி வங்கி கிளீயரன்ஸ் வந்து விடும் என்கிறார். அது வந்த பிறகு நாங்கள் முன்பதிவை தொடங்குவோம்" என்கிறார் ஒரு தியேட்டர் உரிமையாளர்.