Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொருத்தமான கதைகளுக்காக காத்திருப்பேன் என்கிறார் விஷ்ணு!

21 மே, 2014 - 11:50 IST
எழுத்தின் அளவு:

சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு'வில் அறிமுகமானவர் விஷ்ணு. நகரத்தில் பிறந்து வளர்ந்த அவர், அந்த படம் கிராமத்து பின்னணியில் உருவானதால் அதற்காக தலைமுடி, தாடி வளர்த்துககொண்டு தன்னை கிராமத்து நாயகனாக முழுசாக வெளிப்படுத்தினார். அப்படமும் வெற்றி பெற்றதால், அதையடுத்து விஷ்ணுவை சில பட்ஜெட் பட கம்பெனிகள் வேகவேகமாக புக் பண்ணின.


ஆனால், அப்படி நடித்த சில படங்கள் விஷ்ணுவுக்கு தோல்வியை கொடுத்தபோதும், சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த நீர்ப்பறவை அவருக்குள இருந்த நல்ல நடிகரை வெளிக்கொண்டு வந்தது. அதனால் இப்போது சுசீந்திரன் இயக்கும் ''ஜீவா'', சீனுராமசாமி இயக்கும், ''இடம் பொருள் ஏவல்'', ''முண்டாசுப்பட்டி'' போன்ற படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்துள்ளார்.


இதுபற்றி விஷ்ணு கூறுகையில், ஆரம்பத்தில் என்னைத்தேடி வந்ததில் நல்ல படங்களாக நடித்தேன். ஆனால் நீர்ப்பறவைக்கு பிறகு எனக்கு பொருத்தமான கதைகளாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான். எந்த காரணம் கொண்டும் கிடைக்கிற படங்களையெல்லாம் ஓ.கே செய்யமாட்டேன். எனக்கேற்ற கதைகள் கிடைக்கிற வரை காத்திருந்து பொறுமையாக நடிப்பேன் என்கிறார் விஷ்ணு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in