தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம் நாயகனாக நடித்த முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் சந்தானம் மட்டும் பிரபலமானவராக இருந்தார். மற்றபடி படத்தை இயக்கியவர் ஸ்ரீநாத். அதேப்போல் நாயகி ஆஷ்னா சவேரி அவரும் புதிய வரவுதான். மேலும்இசையமைத்தவர் சித்தார்த் என்ற புதியவர்தான். இப்படி அந்த படத்தில் பணியாற்றிய பலர் பிரபலமில்லாதவர்கள்தான்.
அதேபோல். பவர்ஸ்டாரைகூட ஒரேயொரு டயலாக் மட்டுமே பேச வைத்து விட்டு முடித்துக்கொண்ட சந்தானம், என் படத்துக்கு பிரபலம் தேவையில்லை. திறமையானவர்கள் புதியவர்களாக இருந்தாலும் போதும். அதோடு, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னைச்சுற்றி இருந்தாலே போதும். நான் மாபெரும் வெற்றி அடைந்து விடுவேன் என்றும் சொன்னார்.
ஆனால், அடுத்து அவர் நாயகனாக நடிக்கப்போகும் புதிய படத்திலோ, பெரிய டெக்னீஷியன்களை நியமித்துக்கொள்ளுமாறு அப்படத்தை தயாரிக்கயிருக்கும் பிவிபி நிறுவனம் சந்தானத்திடம் கூறியிருக்கிறார்களாம். ஆனபோதும், சந்தானம்தான் அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாராம். அதேசமயம், கதாநாயகியை மட்டும் கொஞ்சம் பேசப்படும் நடிகையாக சேர்த்துக்கொள்வோம் என்று நினைப்பவர், பிரமாண்டமாக படமாக்க ஆசைப்படுகிறாராம்.
மேல்தட்டு ஹீரோக்களை போன்று மிகப்பெரிய அளவில் செட் அமைத்து தானும் பறந்து பறந்து சண்டை போட வேண்டும் என்றும் ஆசையில் இருப்பவர், அப்படத்திற்காக ஒரு அதிடியான மெகா பட்ஜெட் கதையை தேடிக்கொண்டிருக்கிறாராம்.