பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற தலைப்பைப் பார்த்த உடனே இது காமெடி படம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. தலைப்பில் தெரியும் காமெடியயை படம் முழுக்க பரவவிடும் வகையில், அப்பாவி மருத்துவராக, படிப்பறிவு இல்லாதவராக, நண்பர்களோட அரட்டை அடிக்கிறவராக என காட்சிக்கு ஏற்ற வகையில் பரத்தின் மேனரிசம் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்களாம்.
“காமெடி அவருக்கு ரொம்ப இயல்பா வருது. கதைப்படி அவர் சீரியசாக வந்தாலும் ஆடியன்சுக்கு காமெடியாதான் இருக்கும்” என்று ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தை பற்றி கூறுகிறார் டைரக்டர் எல்.ஜி.ரவிசந்தர். “ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி”யா இருக்கிறவர் பரத். படிப்பறிவு இல்லாத அவரோட நண்பர்கள் அவரை ஏமாற்றி வாழறாங்க. ஒரு கட்டத்துல இது பரத்துக்கு தெரிய வருது. அதுல இருந்து தப்பிக்க படிச்ச ஒரு பெண்ணை மனைவியா ஆக்கணும்னு நினைக்கிறார். அது எப்படி நடக்குது அப்படிங்கறதுதான் கதை.
அட்டகத்தி நந்திதா கேரக்டர் பேர் நந்தினி. தம்பி ராமையாவோட செல்லப் பொண்ணு. பரத்துக்கு நந்திதாவை பார்த்ததும் காதல் பத்திக்குது. எம்.பி.பி.எஸ். டாக்டர்ன்னு பரத்தை நினைக்குறதும் அடுத்தாப்ல நடக்கிற காதல் விஷயங்களும் காமெடியா இருக்கும்.
இப்ப சித்த வைத்தியம்னா, ஆண்மை விருத்தி மருந்து...இல்லை....இல்லை... அப்படி சில வைத்திய சாலைகள் இருக்கு. அதை வச்சு தப்பா காமெடி ஏதும் பண்ணலை. சித்த வைத்திய மருத்துவத்துக்கு பெரிய மகத்துவம் இருக்கு. புனிதத்துவம் இருக்கு. அதை மீறாம சொல்லியிருக்கோம். இதுக்காக கொல்லிமலை, சேலம்னு அலைஞ்சு ரிசர்ச் பண்ணியிருக்கேன். என்ன மாதிரியான மூலிகையை பயன்படுத்துறாங்க. நோயாளிகளோட எப்படி பழகுறாங்க. சித்த வைத்தியத்துக்கு என்ன ட்ரீட்மென்டுக்காக அதிகம் வர்றாங்கன்னு நிறைய ஆராய்ச்சி பண்ணி, திரைக்கதை அமைச்சிருக்கேன். அதனால இயல்புக்கு மீறி எதுவும் இருக்காது.
காமெடின்னு முடிவு பண்ணின பிறகு அதுக்கு ஏற்ற ஆட்களை புக் பண்ணினோம். தம்பி ராமையா, கருணாகரன், இமான் அண்ணாச்சி, மதன்பாப், சாம்ஸ் உட்பட 21 காமெடியன்கள் நடிக்கிறாங்க. ஒரு காமெடிக்கு சிரிச்சு முடிச்சா அடுத்த காமெடி வந்து முன்னால நிற்கும். பி.ஜி.முத்தையாவோட ஒளிப்பதிவு பளிச்சுன்னு இருக்கும். சைமன் இசை அமைச்சிருக்கார். ஒரு பாடலுக்காக நெதர்லாந்துக்கு போறோம் என்கிறார்.