மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக பி.குணசேகரன் தயாரிக்கும் படத்திற்கு “பண்டுவம்” என்று பெயரிட்டுள்ளனர். 'பண்டுவம்' என்றால் சுத்தத் தமிழில் ரண சிகிச்சை என்று பெயர். பண்டைய காலத்தில் ரண சிகிச்சையை பண்டுவம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார்.இவர் மைதானம், சாட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தின் இயக்குனர் கீட்டன் முக்கிய வேடம் ஏற்றுருக்கிறார். இவர் பிரபல நடிகர் வாகைசந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன். பாண்டியன் சுமார் 900 படங்களுக்கு டிசைனராக பணியாற்றியவர். அத்துடன் நடிகராகவும், படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது மகனான கீட்டன் இராம நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். மற்றும் ஆண்டனி, கார்த்திக்.எம், பகதூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முத்ரா ஒளிப்பதிவு செய்ய, நீரோ இசையமைக்கிறார்.
“பண்டுவம்”படம் பற்றி இயக்குனர் கூறியது... இந்த கதை மருத்துவம் சம்மந்தப்பட்ட பின்னணியை கொண்டு உருவாகி உள்ளது. கல்லுரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்கையை பதிவு செய்திருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது என்று கூறினார்.