Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என் பாதை தெளிவாக இருக்கிறது: சுந்தர்.சி சிறப்பு பேட்டி!!

19 மே, 2014 - 09:48 IST
எழுத்தின் அளவு:

நட்சத்திர பட்டாளங்களை வைத்துக் கொண்டு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறவர் சுந்தர்.சி. இடையில் சில காலம் நடிக்க சென்றவர் மீண்டும் இயக்குனர் பாதைக்கே திரும்பி வந்து கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்து விட்டு இப்போது அரண்மனையை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பணிகளை முடித்து ரீல்களை கிராபிக்ஸ் வேலைகளுக்கு கொடுத்துவிட்டு ரிலாக்சாக இருந்தவர் அளித்த சிறப்பு பேட்டி:


* காமெடி கமர்ஷியல் படங்களாக தந்துவிட்டு இப்படி திடீர்னு பேய் படத்துக்கு தாவிட்டீங்களே?


அட... இதுவும் காமெடி படந்தான். என்னோட படத்துல கதை இல்லேன்னா மன்னிச்சு விட்டுறீங்க. காமெடி இல்லேன்னா புரட்டி எடுத்துடுவீங்க. அதனால இதுலேயும் சிரிப்புக்கு 100 சதவிகிதம் கியாரண்டி. பேய்ங்ற விஷயம் கதையை நகர்த்திட்டு போறதுக்கு சின்ன லைன் அவ்ளோதான். ஆனால் பயமுறுத்துற சீன்ல கண்டிப்பா பயந்துருவீங்க. அதுல ஏமாற்றம் இருக்காது.


* இப்போ திகில் பட சீசன் அதான் நீங்களும்...?


(கேள்வியை முடிக்கும் முன்...). பாஸ் இந்த சீசன்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு படம் ஹிட்டான அதே பாணியில அடுத்து சில படங்கள் வரத்தான் செய்யும். ஒரு இடத்துல ஜூஸ் கடை வைக்கிறீங்க. அது நல்லா ஓடுச்சுன்னா பக்கத்துலயே இன்னொரு ஜூஸ் கடை வந்திடும். இது ரிஸ்க் எடுக்காத வியாபாரம். இதை நீங்கதான் சீசன்னு சொல்றீங்க. என் வீட்டுல பத்து மணிக்கு மேல உட்கார்ந்து என் பொண்டாட்டியும், பிள்ளைங்களும் ஹோம் தியேட்டர்ல உட்கார்ந்து தினமும பேய் படம் பார்க்குறத பார்த்தேன். அட பேய் படம்ன்னா பொம்பளைங்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும்னு அன்னிக்குத்தான் கண்டுபிடிச்சேன். அது மாதிரி ஒரு படம் பண்ணலாமேன்னு தோணிச்சு. ஆரம்பிச்சிட்டேன்.


* பேய் படம்னாலே ஒரு வீடு கட்டாயமா?


ஹாலிவுட்லேருந்து கோலிவுட் வரைக்கும் பேய் படமுன்னா ஒரு வீடு கட்டாயம். அதுக்கு நான் மட்டும் விதிவிலக்கா. வீடுங்றத அரண்மனைன்னு மாத்திக்கிட்டேன். பேய் படமுன்னா நாலஞ்சு கேரக்டர்தான் இருக்கும். நான் முப்பது கேரக்டர் வச்சிருக்கேன். மற்றபடி இது அக்மார்க் சுந்தர்.சி படம்தான்.


* ஹன்சிகாதான் பேயாமே?


என்னதான் ரசிகயம் காத்தாலும் விஷயம் எப்படியோ லீக் ஆயீடுது. பேய்னு சொல்ல முடியாது. ஒரு சக்தி வாய்ந்த பொண்ணுன்னு வச்சிக்கலாம். நடக்குற எல்லாத்துக்கும் அவர்தான் காரணமா இருப்பார். அவர் சொல்றதெல்லாம் நடக்கும். இத பாருங்க நானே கதையை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் (ஜெர்க்காகிறார்). ஹன்சிகா வில்லேஜ் பொண்ணு கேரக்டர்ல நடிக்கிறாங்க. இதுவரைக்கும் அவுங்கள கவர்ச்சி கன்னியாவே பார்த்தவங்க. இதுல நடிகையர் திலகமா பார்ப்பாங்க. அந்த அளவுக்கு நடிப்புல பிச்சு உதறியிருப்பாங்க.


* ஹன்சியா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூணு ஹீரோயின்கள் இருப்பது கமர்ஷியலுக்குத்தானே...?


கிளாமருக்குத்தானேன்னு நேரடியாவே கேளுங்களேன். அதுதான் இல்லை. ஹன்சிகாவை தெய்வ சக்தி வாய்ந்த பொண்ணுன்னு சொல்லிட்டேன். ஆண்ட்ரியா என்னோட தங்கையா நடிக்கிறாங்க. லட்சுமிராய் அரண்மனைக்கு சொந்தம் கொண்டாடிக்கிட்டு வர்ற பொண்ணு இப்படி மூணு பேருக்குமே வெயிட்டான ரோல் இருக்கு. கிளாமருக்கு சான்சே இல்லை. ஒரு விஷயம் தெரியுமா இப்பல்லாம் ரசிகர்கள் கிளாமரை விரும்புறதே இல்லை. மைல்டான கிளாமர் டச்சைத்தான் விரும்புறாங்க. அது படத்துல இருக்கு.


* இனி நடிக்க போறதில்லைன்னு சொன்னீங்க இதுல நடிக்கிறீங்களே?


நான் நடிக்க முடிவெடுத்தபோது மளமளன்னு படம் குவிஞ்சுது. பணம் கிடைச்சா போதும்னு கதையை பற்றி கவலைப்படாம நடிச்சதுல சில படங்கள் பிளாப் ஆச்சு. எனக்கு கெட்டபெயர்தான் மிச்சம். இனி இந்தப் பாதை சரிப்பட்டு வராதுன்னு படம் இயக்குறதுக்கு வந்துட்டேன். இப்போ என் பாதை தெளிவா இருக்கு. அரண்மனையில நடிக்கிறதுக்கு சில முக்கிய ஹீரோக்கள்கிட்ட கேட்டேன். அண்ணன், தங்கச்சி செண்டிமெண்ட் பேய் படம் அப்படி இப்படின்னு குழப்பிக்கிட்டு ரொம்ப யோசிச்சாங்க. சரி நாமே நடிச்சிருவோம்னு நடிச்சிட்டேன். ஆனாலும் இனி தொடர்ந்து இயக்கம்தான்.


* வாய்ப்பே இல்லாமல் இருந்த பரத்வாஜை மீண்டும் கொண்டு வந்திருக்கீங்களே?


எவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கும் ஒரு கேப் வழுந்திடும். எனக்குகூட நான்கு வருஷம் கேப் விழுந்திச்சு. அதுக்காக திறமை இல்லேன்னு ஆயிடுமா பரத்வாஜ் எத்தனை சூப்பர் ஹிட் கொடுத்தவர். அரண்மனை அவரை அடுத்து லெவலுக்கு கொண்டு போகும்.


* தொடர்ந்து சந்தானத்துக்கே வாய்ப்பு கொடுக்குறீங்க, வடிவேலு ரீ-என்ட்ரி ஆகியிருக்காரே?


இதுவரை நான் சந்திச்ச நடிகர்கள்ல யார் பெஸ்டுன்னு கேட்டா சந்தானத்தை சொல்வேன். இதுவரை என் படத்துல நடிக்கிறதுக்கு என்ன ரேட், எந்த டேட்னுன்னு அவர் கேட்டதே இல்லை. கூப்பிட்டா நடிக்க வருவார், கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்குவார். வடிவேலுகூட இணைந்து சில படங்கள் பண்ணினேன். இனி வடிவேலுவுடன் எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற மாட்டேன்.


* தேர்தலில் தி.மு.க....?


(கேள்வியை முடிப்பதற்குள்) பாஸ்... நாம இப்போ அரண்மனை பற்றித்தான் பேசிக்கிட்டிருக்கோம்... அரசியல் நமக்கு எதுக்கு பாஸ்... அதை மேடத்தை (குஷ்பு) பார்க்கும்போது கேட்டுக்குங்க.


என்று கூறிவிட்டு எஸ்கேப்பாகி கொண்டார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in