ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சமீபத்திய படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. மோகன்லாலுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தப்பித்து விட்டார். அடுத்து ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது மம்முட்டிக்கு. இல்லாவிட்டால் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து, விருது கமிட்டிக்கு சேர்மன் ஆக்கிவிடுவார்கள்.
இதனால் தான் அடுத்து நடிக்கும் வர்ஷம் படத்தில் மொத்த திறமையையும் காட்டி நடிக்க முடிவு செய்திருக்கிறார். 45 வயது முதல் 55 வயது வரை கடக்கும் ஒருவனின் வாழ்க்கை சம்பங்களை கொண்ட படம். இதில் மம்முட்டிக்கு 5 கெட் அப். ஒவ்வொரு 2 வருடங்களிலும் ஒரு மனிதனின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள். குணத்தில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யும் படமாம். இந்த படத்துக்கு இன்னொரு தேசிய விருது மம்முகாவுக்கு ரெடி என்கிறார்கள், அவரது நண்பர்கள். மம்முட்டியும் வர்ஷத்தை பெரிதும் நம்புகிறார்கள். ரஞ்சித் சாகர் இயக்குகிறார்.