தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கோ அது ஒரு முறை அல்ல, பல முறை கிடைத்து விட்டது.
முதன்முதலில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜியில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனமாடினார். அதன்பிறகு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் ரஜினி நடிகராகவே நடிக்க, நயன்தாராவும் நடிகை வேடத்திலேயே நடித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது ரவுண்டில் அஜீத், ஆர்யா, சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என்று மேல்தட்டு இளவட்டங்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, ரஜினி நடிக்கும் லிங்காவிலும் நடிக்கிறாராம். இந்த படத்தில் ஏற்கனவே இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் இருந்தபோதும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றுகிறாராம் நயன்தாரா.
இரண்டாவது ரவுண்டில் இதுவரை எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில்லை என்று கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நயன்தாரா, ரஜினி படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை முதன்முறையாக தளர்த்தியிருக்கிறார்.