'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் கால்பந்தை நோக்கிச் செல்கிறார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் விளம்பர தூதுவராக ஜான் ஆபிரஹாமை சோனி சிக்ஸ் தொலைக்காட்சி நியமித்துள்ளது.
பிரேசில் நாட்டின் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ஒருவருடன் இணைந்து ஜான் ஆபிரஹாம் இந்த பணிகளை செய்ய இருக்கிறார். கிரிக்கெட்டுக்கு இணையாக இந்தியாவில் கால்பந்தாட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது ஜானின் நீண்டநாள் விருப்பம். காரணம் அடிப்படையில் ஜான் ஒரு கால்பந்து வீரர். பள்ளி, கல்லூரி நாட்களில் தேசிய போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்தியன் சூப்பர் லீக் கவுகாத்தி பிரிவின் உரிமையாளராகவும் இருக்கிறார்.