மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சித்தார்த்தைப்பொறுத்தவரை அவரது நடிப்பு குறித்து எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார். அதற்கு உரிய பதிலை கொடுத்து முடித்து விடுவார். ஆனால், பர்சனல் விசயத்தில் கை வைத்தால் கொந்தளித்து விடுவார். நடிகர்-நடிகைகளின் ஒரு பக்கத்தை மட்டும் பாருங்கள். மறுபக்கத்தை பார்க்க நினைக்காதீர்கள். மற்றவர்களின் சொந்த வாழ்க்கைய்போலவே அவர்களின் வாழ்க்கையிலும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கும். அதை கிண்டிப்பார்த்தால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்று விளக்கம் கொடுப்பார்.
அப்படிப்பட்ட சித்தார்த், சமந்தாவுடனான காதல் செய்திகள் கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கிக்கொண்டு கிடக்கிறார். என்னதான் அவர் அதை கண்டுகொள்ளாதவர் போல் இருந்தாலும், மீடியாக்கள் அவரை விடுவதாக இல்லை. அவ்வப்போது சமந்தாவுடன் ரகசிய திருமணம், தனிக்குடித்தனம் என்பது போன்ற செய்திகள் வெளியிட்டு சித்தார்த்தை கலங்கடித்து வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த்துக்கு டீன்ஏஜ் வயதில் பிள்ளைகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு தனது டுவிட்டரில், என்னைப்பற்றி வதந்திகள் வெளியாவது புதிது இல்லை என்றாலும், எனக்கு டீன்ஏஜ் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கொஞ்சம்கூட உண்மையில்லாத செய்திகள் வெளியாகும்போது மனதளவில் வருத்தப்பட வைக்கிறது என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.