பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்-ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி.
இந்த நிலையில், அதற்கடுத்து தான் இயக்கியுள்ள அரண்மனை படத்திலும் சந்தானத்துக்கு முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி. சந்திரமுகி ஜோதிகா பாணியில் ஹன்சிகா பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படம் அரண்மனை பேய்களை மையப்படுத்தின கதையில் உருவாகிறது. அதனால் ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட ஹன்சிகா தனது பயத்தை படம் பார்ப்போருக்கு குலைநடுங்க வைக்கும் வகையில், பீதியை கிளப்பும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம்.
அதேபோல், இதே படத்தில் சுந்தர்.சி. வினய், லட்சுமிராய், ஆண்ட்ரியா என பலர் இருந்தபோதும், சந்திரமுகியில் வடிவேலு நடித்தது போல் இப்படத்தில் சந்தானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் இயக்குனர். திகில் காட்சிகள் மட்டுமின்றி, லட்சுமிராயுடன் அவருக்கு ஒரு அதிரடியான குத்துப்பாட்டும் உள்ளதாம். இருவரும் போட்டுள்ள கும்மாங்குத்து கவர்ச்சிப்பிரியர்களுக்கு நல்ல தீனி போடுமாம். அந்த அளவுக்கு தனது வளவளப்பான தேகத்தில் இளைஞர்கள் வழுக்கி விழும் வகையில் கவர்ச்சி பீரங்கியாகவும் வெடித்து சிதறியிருக்கிறாராம் லட்சுமிராய். ஆக, அரண்மனை திகில், காமெடி, கவர்ச்சி கலந்து ஒரு மசாலாப்படமாக உருவாகியுள்ளதாம்.