ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜெய்-நஸ்ரியா நடித்துள்ள படம் திருமணம் என்னும் நிக்கா. புதுமுக இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ள இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் நேரம் என்றாலும், அவர் தமிழில் கமிட்டான முதல் படம் இதுதான். இப்போது நஸ்ரியாவுக்கு நிஜத்திலும் திருமணம் முடிவாகியுள்ள இந்த நேரத்தில்தான் அந்த படமும் திரைக்கு வரத்தயாராகியுள்ளது.
அனைத்து கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ள நிலையில், திருமணம் என்னும் நிக்கா இன்று 16-ந்தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் அப்படத்துக்கு தமிழக அரசிடமிருந்து வரிச்சலுகை கிடைக்காததால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற 23-ந்தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ஆனால், அதே தேதியில்தான் ரஜினியின் கோச்சடையான் படமும் வெளியாகிறது. இருப்பினும் திருமணம் என்னும் நிக்காவும் வெளியாகும் என்கிறார்கள். ஒருவேளை எதிர்பார்த்தபடி சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாறலாம் என்கிறார்கள்.