'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'போடா போடி' படத்துக்கு பின், புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி, கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்த நேரத்தில் தான், யாரும் எதிர்பாராதவிதமாக, இயக்குனர் பாலாவிடமிருந்து, அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால், உற்சாகமடைந்துள்ள வரலட்சுமி, முழு ஈடுபாட்டுடன் அந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதில், கரகாட்டம் ஆடும் பெண்ணாக அவர் நடிப்பதால், அதற்காக, முழு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இயக்குனர் பாலா கேட்டுக்கொண்டதால், தன் உடல் எடையையும், 10 கிலோ குறைத்துள்ளாராம்.