ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள காலி இடங்கள், மற்றும் பூங்காக்களில் அம்மா தியேட்டர்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். தற்போது இந்த அம்மா தியேட்டர்கள் திறந்தவெளி தியேட்டர்களாக அமைக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கட்டிட நிபுணர்களுடன் மேயர் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்கட்டமா ஒரு மண்டலத்திற்கு ஒரு திறந்தவெளி தியேட்டர்கள் கட்டப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் பாணியில் இந்த தியேட்டர்கள் அமைக்கப்படுகிறது. உள்ளேயே கடைகள், சிற்றுண்டி சாலைகள் இருக்கும். மக்கள் சிற்றுண்டி அருந்தியபடியே படம் பார்க்கலாம். தனித்தனி கழிப்பிட வசதியும் செய்யப்படுகிறது. வெளியாகும் புத்தம் புதிய படங்களை மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் கண்டு மகிழும் வகையில் இந்த தியேட்டர்கள் அமைக்கப்பட இருக்கிறது.