Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் மாதம் அஞ்சான், அக்டோபர் மாதம் புறம்போக்கு!

15 மே, 2014 - 08:10 IST
எழுத்தின் அளவு:

இன்றைய தேதியில் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கிக் கொண்டிருப்பது ஒரு சில நிறுவனங்கள்தான். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், யுடிவி மோஷன் பிக்சர்ஸ், ஸ்டுடியோக்ரீன், திருப்பதி பிரதர்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பன்னாட்டு நிறுவனம்.
தமிழ்த்திரைப்படம் தயாரிக்க வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள் வந்த வேகத்தில் திரும்பிச்சென்றுவிட்டன. தாக்குப்பிடித்து நிற்பது யுடிவி மட்டுமே. இங்குள்ள சூழலைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்து வருகிறது யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம். ஒவ்வொரு படத்தையும் மிகச் சரியாய் திட்டமிடுவது, திட்டமிட்டபடி செயல்படுவது என்பதில் உறுதியாய் இருந்து வருகிறது யுடிவி.
ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதே இப்போதெல்லாம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. யுடிவி நிறுவனமோ, நான் சிகப்பு மனிதன் படத்தை அடுத்து, விக்ரம் பிரபு நடிக்கும் சிகரம் தொடு, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான், ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம் நடிக்கும் புறம்போக்கு, விஷ்ணுவர்தன் இயக்கும் யட்சன் ஆகிய நான்கு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது யுடிவி.
தயாரிப்பது மட்டுமல்ல, தயாரித்த படங்களை சரியானமுறையில் மார்க்கெட்டிங் செய்து ரிலீஸ் பண்ணுகிறது. தற்போது யுடிவி தயாரித்து வரும் படங்களை கீழ்க்கண்ட ஷெட்யூலின்படி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.
ஜூன் மாதம் சிகரம் தொடு படமும், ஆகஸ்ட் மாதம் அஞ்சான் படமும், அக்டோபர் மாதம் புறம்போக்கு படமும், ஜனவரி மாதம் யட்சன் படமும் யுடிவியின் தயாரிப்பில் வரிசையாக வெளியாக உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in