ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஆஷ்னா ஜவேரி. மும்பையை சேர்ந்த இவர் விளம்பர உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஷாருக்கானுடன் நடித்த ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்று அப்படியே தமிழ் சினிமாவுக்கும் வந்து விட்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தற்கு புல்லரித்துப்போய் இருக்கிறார். ஷாருக்கானும், சந்தானமும் எனது ஹீரோக்கள் என பெருமை பொங்க சொல்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: ஷாருக்கான் போலவே சந்தானமும் சுறுசுறுப்பானவர், அவர் ஷெட்டுக்கு வந்தாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. பெல்லி டான்ஸை முறைப்படி கற்றிருக்கிறேன். சினிமாவுக்கு வருவேன் என்றோ அதுவும் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்றோ கனவிலும் நினைத்தது இல்லை. தமிழ் ரசிகர்கள் திறமையானவர்களை ஆதரிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை இப்போது அனுபவிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ரசிகர்களை நேரில் சந்திக்க இருக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தமிழ் சினிமாவிலும், தமிழ் ரசிகர்களின் மனதிலும் நிரந்தர இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் ஆஷ்னா.