வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் கடந்த வாரம் ஒன்பதாம் தேதி வெளியாகவிருந்தது. கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மே 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் அளிக்க... வங்கியில் 40 கோடி கடன்பாக்கி இருப்பதால் கோச்சடையான் படத்துக்கு கோர்ட் தடை விதித்துவிட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் கோச்சடையான் படம் மே 23 ஆம் தேதி வெளிவருவதே சந்தேகம்தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தை வெளியிடும் உரிமையை ஸ்டுடியோக்ரீன் படநிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா வாங்க இருப்பதாகவும், அதனால் திட்டமிட்டபடி மே 23 ஆம் தேதி கோச்சடையான் படம் வெளிவந்துவிடும் என்றும் ஒரு சாரர் சொல்கிறார்கள். கோச்சடையான் படத்துக்கு பிரச்சனையாக இருப்பது அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் கணக்கை முடித்துவிட்டு, விளம்பரங்களில் இருந்து அந்நிறுவனத்தின் பெயரை அகற்றிவிட்டால் கோச்சடையான் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். அதன் பிறகு படத்தை நான் வெளியிடுகிறேன் என்று ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் கூறி இருக்கிறாராம் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா. இதற்கு ஈராஸ் ஒப்புக்கொண்டால் கோச்சடையான் படத்தை ஸ்டுடியோக்ரீன் வெளியிடுமாம்.