ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ராதாவின் மகள் துளசி நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் எல்ரெட் குமார், ஜெயராமன் தயாரிக்கும் இந்தப் படம் கடந்த வருடம் துவங்கப்பட்டது. யான் படம் துவங்கப்பட்டது முதல் இப்படம் பற்றிய செய்திகள் தொடர்ந்து அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. அவை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு, யான் படத்தை மக்கள் மத்தியில் பரிச்சயப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், யான் படத்தின் இசைவெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவுக்கு மீடியாக்களுக்கு அழைப்பு இல்லை.
ஏன்? மீடியாக்கள் வேண்டாம் என் ரசிகர்கள் முன்னிலையில் யான் ஆடியோவை வெளியிட்டால் போதும் என்று அப்படத்தின் ஹீரோ ஜீவா தயாரிப்பாளர்களிடம் கூறினாராம்.
ஹீரோவே இப்படி சொன்ன பிறகு அவர் பேச்சை தயாரிப்பாளர்களால் தட்ட முடியுமா? எனவே மீடியாக்களை அழைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜீவாவின் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டு யான் படத்தின் இசைவெளியீடு நடைபெற்றிருக்கிறது.