Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை கொடுக்கும் லட்சுமிமேனன்!

13 மே, 2014 - 11:29 IST
எழுத்தின் அளவு:

கும்கி படத்தில் நடித்த லட்சுமிமேனனுக்கு அதையடுத்து தான் இயக்கிய சுந்தரபாண்டியன் படத்தில் நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன்தான். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால், அதையடுத்து உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை நடிக்க வைக்க அவர் முற்பட்டபோது நயன்தாரா இடையில் புகுந்து அவரது ஆசைக்கு உலை வைத்து விட்டார்.


ஆனபோதும், நீங்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் தரத்தயாராக இருக்கிறேன் என்று இப்போதுவரை டைரக்டர் பிரபாகரனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் லட்சுமிமேனன். அதனால், அடுத்தபடியாகவும் உதயநிதியை வைத்து ஒரு படம் இயக்க கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் பிரபாகரன் அந்த படத்திலேனும் லட்சுமிமேனை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று அவரையும் மனதில் கொண்டு கதை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.


அதுமட்டுமின்றி, ஒருவேளை உதயநிதி பேக் அடித்து விட்டால் வேறு கம்பெனிக்காவது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்று நினைக்கும் எஸ்.ஆர்.பிரபாகரன், தான் சந்திக்கும தயாரிப்பாளர்களிடம், ராசியான நடிகை லட்சுமிமேனனின் கால்சீட் பாக்கெட்டில் இருக்கிறது. அதனால், எந்த ஹீரோவை வைத்து படம் பண்ண சொன்னாலும படம் இயக்க நான் தயார் என்றும் கூறி வருகிறார் பிரபாகரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in