இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
2011ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ராதா மகள் கார்த்திகா இணைந்து நடித்த படம் மகரமஞ்சு. இது பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும் அவருக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட படம். இதில் சந்தோஷ் சிவன், ராஜா ரவிவர்மனாகவும், கார்த்திகா, ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகாக படு கவர்ச்சியாகவும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த படம். இவர்களுடன் நித்யாமேனன், மல்லிகா கபூர், பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கி இருந்தார். மதுஅம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள்.
மாணக்யா பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இதனை அப்ரசஸ் என்ற பெயரில் தமிழில் டப் செய்திருக்கிறது. வருகிற 23ந் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இனம் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள சந்தோஷ் சிவன், இந்தப் படத்தின் மூலம் அதனை சரிக்கட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.