பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு நடித்த படம் தெனாலிராமன். இந்த படம் தனக்கு மிகப்பெரிய என்ட்ரியை கொடுக்கப்போகிறது என்று அவர் நினைத்தார். ஆனால், அப்படம் பெரிய அளவில் அவரை ஏமாற்றி விட்டது. அதனால் அந்த படத்தையடுத்து பிரபுதேவா உள்ளிட்ட சில முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்கயிருப்பதாக கூறிவந்த வடிவேலு, இந்த தோல்விக்கு பிறகு யாருமே தன்னைத்தேடி வராததால் மீண்டும் தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கத்திலேயே நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அதோடு, அந்த படத்தை தயாரிப்பது குறித்து எந்த படநிறுவனத்தையும் அணுகவில்லையாம் வடிவேலு. படம் தோல்வியடைந்த நிலையில்,. மற்றவர்களிடம் கேட்பது பலனளிக்காது என்பதால், இந்த முறை தானே தயாரிப்பாளராகவும் உருவெடுக்கிறாராம் வடிவேலு. தெனாலிராமனுக்கு முன்பு சிலர் அவரை தயாரிப்பாளராக சொன்னபோது எதற்கு ரிஸ்க் என்று தயங்கிய வடிவேலு, இப்போது தன்னை வைத்து மற்றவர்கள் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் என்பதால், வேறு வழியில்லாமல்தானே ரிஸ்க் எடுத்தாவது தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்று கோதாவில் இறங்கியிருக்கிறார்.
மேலும், இந்த நேரத்தில் இடைவெளி விட்டால் சரிவராது என்பதால், உடனடியாக அந்த படவேலைகளையும் தொடங்கி விட்ட வடிவேலு, இந்த முறை ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு மெகா ஹீரோயினியுடன் டூயட் பாடவும் திட்டமிட்டுள்ளார். அதனால், கதை விவாதம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, கதாநாயகி தேடும் வேட்டையும் இன்னொரு பக்கம் துரிதமாக நடக்கிறது.