அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
தயாரிப்பாளராக இருந்து பசங்க படத்தின் மூலம் நடிகரானவர் ஜெயபிரகாஷ். படம் தயாரித்து சம்பாதித்ததை விட இப்போது நடித்து சம்பாதிப்பதுதான் அதிகம். இவரது பார்ட்னராக இருந்த ஞானவேலுவும் நடிக்க வந்துவிட்டார். இப்போது ஜெயபிரகாசின் மகன்கள் நிரஞ்சன் ஜெயபிரகாசும், துஷ்யந்த் ஜெயபிரகாசும் ஐவராட்டம் என்ற படத்தில் நடிக்கிறார்கள். ஜெயபிரகாசும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நித்யா ஷெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மிதுன் மாணிக்கம் என்பவர் இயக்குகிறார்.
"5 பேர் மட்டுமே விளையாடும் கால்பந்தாட்ட போட்டியை அடிப்படையாக கொண்ட கதை. இந்த விளையாட்டை சிவகங்கை பகுதியில்தான் விளையாடுவார்கள். அதற்கான மைதானங்களும் இங்குதான் உள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள், காதல் செண்டிமெண்ட் கலந்த கதை. எல்லாவற்றுக்கும் அந்த விளையாட்டின் மூலமே தீர்வு சொல்கிற திரைக்கதை. முழு படப்பிடிப்பும் சிவகங்கை பகுதியிலேயே நடந்து முடிந்துள்ளது" என்கிறார் இயக்குனர் மிதுன் மாணிக்கம்.