தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யா, ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசிசங்கர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் பகடை பகடை, இதில் ஜெயம் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த திலீப்குமார் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக திவ்யாசிங் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக திவ்யாசிங்கின் சகோதரி ரிச்சு நடிக்கிறார். ராம்ஜி இசை அமைக்கிறார் முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.
"பணம் எப்படியெல்லாம் ஒருவனின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல், ஆக்ஷன் கலந்து சொல்லும் கதை. மனிதர்கள் ஆடும் விளையாட்டில் பணம்தான் பகடை காய். நல்லதுக்கும் அதுதான், காரணம் கெட்டதுக்கும் அதுதான் காரணம். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது" என்கிறார் இயக்குனர் சசிசங்கர்.