தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அதையடுத்து பென்சில், ஈட்டி உள்ளிட்ட சில படங்களில் கமிட்டானார். அந்த படங்களில் மாடர்ன் காஸ்டியூம் என்பதோடு ஓரளவு கவர்ச்சிகரமாகவும் நடித்துள்ளார். ஆனபோதும், அவரது முதல் படமே கிராமத்து படமாக அமைந்து விட்டதால் ஸ்ரீதிவ்யாவுக்கு குறைவான சம்பளமே கொடுத்துள்ளார்களாம்.
அதனால் இப்போது யாராவது கிராமத்து கதை என்று அவரை தேடிச்சென்றாலே இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்லை என்கிறாராம். காரணம் கேட்டால், கிராமத்து கதைகளில் நடிப்பதால் நல்ல குடும்ப நடிகை என்கிற இமேஜ் கிடைக்கும். பர்பாமென்ஸ் பண்ணவும் நிறைய வாய்ப்பு இருக்கும் என்பதால்தான் நான் அதில் ஆர்வமாக நடித்தேன்.
ஆனால், கோடம்பாக்கத்தைப் பொறுத்தவரை கிராமத்து கதைகளில் நடிப்பவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள். குறிப்பாக, சம்பளத்தை குறைத்து விடுகிறார்கள். அதனால் இனி நானும் நயன்தாரா, ஹன்சிகா பாணியில் அதிரடி நடிகையாக ஒரு ரவுண்டு வரப்போகிறேன். கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் என்னாலும் நடிக்க முடியும் என்கிற துணிச்சல் இருக்கும்போது எதற்காக மார்க்கெட்டில் பின்தங்கியிருக்க வேண்டும் என்கிறாராம்.
இதனால், லட்சுமிமேனனை மாதிரி இவரும் குடும்ப நடிகை என்று நம்பி சென்ற டைரக்டர்கள், அவருக்குள் மிகப்பெரிய கவர்ச்சி நாயகி இருப்பதை தெரிந்து கொண்டு, நான்வெஜ் நடிகையாக துடிப்பவரை நாம் எதற்காக வெஜிடேரியன் கதையில் நடிக்க வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.