Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வங்கியில் வாங்கிய 40 கோடி கடன் பாக்கி... கோச்சடையான் படத்துக்கு நீதிமன்றம் தடை..

10 மே, 2014 - 15:05 IST
எழுத்தின் அளவு:

மே 9 ஆம் தேதி வெளிவருவதாக இருந்த கோச்சடையான் படம் வெளிவரவில்லை. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்றும் மே 23 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பினர் அறிவித்தனர். அதை இந்த தேசம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்க.. கோச்சடையான் வெளியாகாததற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.


கோச்சடையான் படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் படநிறுவனம், வங்கியில் கோச்சடையான் படத்தின் மீது 20 கோடி கடன் வாங்கி இருந்ததாம். இந்தப் பணத்தைக் கொண்டு கோச்சடையான் படத்தை ஆரம்பித்தள்ளனர். பட பணிகள் நடைபெற்று வந்தநிலையில் மேலும் பணம் தேவைப்பட்டதால், கோச்சடையான் படத்தை அடமானமாக வைத்து இன்னொரு வங்கியில் 40 கோடி கடன் பெற்றுள்ளார் தயாரிப்பாளர்.


கோச்சடையான் படத்தை வெளியிடுவதற்கு முன் இரண்டு வங்கிகளிலும் வாங்கிய கடனை அடைக்க வேண்டும். அப்போதுதான் க்ளியரன்ஸ் கிடைக்கும். தயாரிப்பாளராகல் 60 கோடியை புரட்ட முடியவில்லை. எனவே படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கடன் தொகையை செலுத்துவதாக கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பில்.


அவரது கோரிக்கையை நிராகரித்த வங்கி நிர்வாகம் கோச்சடையான் படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாட, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.


இதன் காரணமாகவே கோச்சடையான் படம் மே 9 ஆம் தேதி வெளிவரவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in