ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திரைப்படங்களுக்கான தேசிய விருதை வழங்கினார். தங்க மீன்கள், மற்றும் தலைமுறைகள் படமும் அதில் பங்கேற்ற கலைஞர்களும் தேசிய விருதுகள் பெற்றனர். இந்த ஆரவாரத்துக்கு இடையே ஒரு 7 நிமிட தமிழ் குறும்படம் பியூச்சர் பிலிம் அல்லாத கேட்டகிரியில் தேசிய விருது பெற்றுள்ளது. தர்மம் என்ற அந்த குறும்படம் ஏழரை நிமிடங்கள் ஓடக்கூடியது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் விருது பெற்ற இந்தப் படம், கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று, தற்போது தேசிய விருதினை பெற்றுள்ளது. இதனை மனோன் எம்.அஸ்வின் என்பவர் இயக்கி இருக்கிறார். இதுவரை 7 குறும்படங்களை இயக்கி உள்ள இவர், தற்போது பிரபு சாலமனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
ஒரு பணக்கார வீட்டு தம்பதிகள் தங்கள் மகனை பிச்சைக்கார சிறுவன்போல் வேடம் அணியச் செய்து பயிற்சி கொடுத்து பள்ளி மாறுவேட போட்டிக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகிற வழியில் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்குவதையும், அப்பா போக்குவரதுது போலீசுக்கு லஞ்சம் கொடுப்பதையும், வயதான நிலையில் பிச்சையெடுக்கும் முதியவரையும் சந்திக்கிறான். வீட்டில் சொல்லிக்கொடுத்த வசனங்களை மறந்து அந்த பிச்சைக்காரர் சொன்னதையே மேடையில் சொல்லி கைதட்டல் வாங்குகிறான். நிஜமான பிச்சைக்காரர் தர்மம் வாங்குகிறார் மற்றவர்கள்தான் பிச்சை எடுக்கிறார்கள். இதுதான் குறும்படத்தின் தீம்.