பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி இரண்டு வேடங்களில நடித்து வரும் படம் லிங்கா. இந்த படத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா- அனுஷ்கா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இதில் முறுக்கு மீசை வைத்து ஜமீன்தார் கெட்டப்பில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது ரஜினியின் மருமகனான தனுஷ் நடிக்கும் படத்திலும் சோனாக்ஷியை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது.
தனுஷைக்கொண்டு ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் மூன்றாவதாக இயக்கும் படத்திலும் தனுஷே நடிக்கிறார். முந்தைய இரண்டு படங்களையும் விட அடுத்து இன்னும் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் வெற்றிமாறன், படத்தில் நடிப்பவர்களும் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
அதனால், இந்தியில் பிரபலமான ஒரு நடிகையை நடிக்க வைத்தால் தற்போது தனுசுக்கு பாலிவுட்டில் இருக்கிற மார்க்கெட்டை வைத்து அங்கும் படத்தை ஓட வைத்து விடலாம் என்று தற்போது சோனாக்ஷியிடம் பேசிக்கொண்டிருக்கிறாராம் வெற்றிமாறன். தமிழில் ரஜினிகாந்துடன் அறிமுகமாவதால் இது எனக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறிய சோனாக்ஷி, அவர்கள் சொன்ன கதையைக்கேட்டு விரைவில் நல்ல பதில் சொல்வதாக கூறியிருக்கிறாராம்.