தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 12 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அதில் சண்முகப்பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளனர். முன்னதாக, கடந்த ஆறு மாதமாக அவருக்கு பொருத்தமான கதாநாயகி தேடும் படலத்தை நடத்தியிருக்கிறார்கள்.
காரணம், சண்முகப்பாண்டியன் 6.4 உயரம். அதனால் கிட்டத்தட்ட 5.5 அடிக்கு மேலாவது கதாநாயகி இருந்தால்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், பல மாநிலங்களிலும் சகாப்தம் யூனிட் சல்லடை போட்டு கதாநாயகியை தேடி வந்திருக்கிறார்கள். அப்படி எங்குமே சிக்காத கதாநாயகியை தற்போதுதான் புனேயில் கண்டு பிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நகரம், இன்னொருவர் கிராமம். இரண்டுவிதமான கெட்டப்புகளுக்கும் நல்ல உயரமான நடிகையாக தேடியவர்களுக்கு இப்போது வட மாநிலத்தில் இருந்தே 5.11 அடி உயரம் அந்த இரண்டு நடிகைகளும் கிடைத்து விட்டதால் நாளை முதல் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துரிதமாக தொடங்குகிறது. அதேசமயம், ஒவ்வொரு படத்திலுமே இதேமாதிரி உயரம் கொண்ட கதாநாயகி வேண்டுமென்றால் சண்முகப்பாண்டியனுக்கேற்ற கதாநாயகி தேடுவதிலேயே பாதி நேரம் போய் விடும் என்கிறார்கள்.