டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லொள்ளு தாதா பராக் பராக் படத்தை அடுத்து மன்சூரலிகான் தயாரித்து இசையமைத்து, இயக்கி நடிக்கும் படம் அதிரடி. தனது ஒவ்வொரு படத்தின் தொடக்க விழாவின்போதும் ஏதாவது பரபரப்பை உருவாக்கும் மன்சூரலிகான், இந்த படத்தின் பூஜை அன்றும் மேடையில் ஏறி 50 முட்டைகளை உடைத்து குடித்து கலக்கல் ஆட்டம் போட்டபடி என்ட்ரி கொடுத்தார்.
அதனால் படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்திருக்கும் மன்சூரலிகான், ஏதாவது அதிரடியான அரசியல் கதையை படமாக்கப்போகிறாரோ என்று பார்த்தால், இது அரசியல் படமில்லையாம், ஆனால் அரசியலும் உள்ளதாம். மேலும், அனல் பறக்க கதை பண்ணாமல் ஜாலியான ஒரு கலவையாகத்தான் கதையை பண்ணியிருக்கிறாராம்.
மேலும், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் ஆடும் கழைக்கூத்தாடிகளைப்பற்றிய கதையில் உருவாகும் இந்த படத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற பாடல்களை பாடி நடித்துள்ளாராம் மன்சூர். இப்படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளதாம். தானே இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்பதால், தன் மனசுக்கு வந்ததையெல்லாம் எழுதி தள்ளியிருக்கும் மன்சூர், அந்த பாடல்களை தானும் பாடியதோடு, தனது மகள்களையும் 3 பாடல்கள் பாட வைத்திருக்கிறார்.