புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படமான திருமணம் எனும் நிக்காஹ் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆஸ்கார் பிலிம்ஸ் ஐ, மரியான் என பல பெரிய ப்ராஜக்டுகளில் கால் வைத்ததால் இந்தப் படம் தாமதம் ஆனது. படம் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் வெளியாவதில் பிரச்னை இருந்து கொண்டே இருந்தது.
இப்போது ஒரு வழியாக மே 15ந் தேதி வெளிவருவதாக அறிவித்து விட்டார்கள். ஜெய், நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்தை அனீஷ் இயக்கி இருக்கிறார். ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்து பையன் இஸ்லாமியராக நடித்தும், இஸ்லாமிய பெண் இந்து பெண்ணாக நடித்தும் காதலிக்கிற கதை. கடைசியில் உண்மை தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது சுவாரஸ்யமான திருப்பம். படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் படம் மே 15ல் ரிலீசாகிறது.