மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தனுஷ் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம். அஸ்ரியா ஹீரோயின். கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் சகோதரர்கள் தயாரிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். அவரது இசையில் பவதாரிணி "ஆத்தாடி... ஆத்தாடி..." என்ற பாடலை பாடியுள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் தொடங்கி பல்வேறு கட்டமாக சென்னை, ஐதராபாத், தெற்காசிய நாடுகளில் நடந்தது. இதுவரை 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இரண்டு பாடல்களும், கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியது இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விடும். அனேகமாக, அனேகன் படம் ஜூலையில் வெளிவரலாம்.