தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மனரீதியான பிரச்னைகளோடு கதை சொல்லி வெற்றி பெற்ற படங்கள் பசங்க, மற்றும் கோலிசோடா. அந்த வரிசையில் தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் படம் பூவரசம் பீப்பி. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரகனி, மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஷமீம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் தரும் முன்னோட்டம் இது.
சிறுவர்களின் மனது தண்ணீர் போன்றது கனமான எதைப் போட்டாலும் உள்வாங்கிக் கொள்ளும். பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் அவர்களுக்கு பிடித்தது. அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம்.
கவுரவ், பிரவீன் கிஷோர், கபில்தேவ், வர்ஷினி, அகல்யா என்ற குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது என்கிறார் ஷமீம்.