சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
எல்லாம் அவன் செயல், அழகர் மலை, அவன் இவன், புலிவேசம், ஜில்லா உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்.கே., தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பூனம் கவுர் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்சன் ரோலில் நடிக்கிறார் ஆர்.கே., என் வழி தனி வழி என்பது ரஜினி ஒரு படத்தில் பேசிய பஞ்ச் டயலாக் என்பதால், அவர் பாணியில் ஆர்கேவும் சில பஞ்ச் முத்துக்களையும் உதிர்க்கிறாராம்.
இதற்கெல்லாம் மேலாக, பூனம் கவுர் காட்டும் கவர்ச்சி போதாதென்று ஒரு ரஷ்யன் கவர்ச்சி மலையையே இப்படத்துக்கு கொண்டு வருகிறார்கள். அட்லீனா கேத்ரீனா என்ற அந்த நடிகை கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி அதிரடியாக நடனமாடுவதிலும் உலக அளவில் புகழ் பெற்றவராம். அதனால், வடகறியில் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம ஆடியிருப்பது போன்று இந்த அட்லீனா கேத்ரீனாவையும் ஒரு செமத்தியான குலுக்கல் ஆட்டம் போட வைத்துள்ளாராம் ஆர்.கே.,