ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
“எதிரியை எதிரியாக பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு சண்டமாருதம் என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைக்கும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் சண்டமாருதம் என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம்.
முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார். ஏ. வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார்.