இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
அஜித்தை வைத்து வீரம் படத்தை எடுத்த விஜயாவாஹினி பட நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள படத்திற்கு யாரை அணுகி கால்ஷீட் கேட்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. பல முன்னணி ஹீரோக்களின் பெயர்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாம். அதிலிருந்து விஷால் பெயரை டிக் அடித்தவர்கள், தங்கள் நிறுவனத்துக்கு படம் பண்ணித்தரும்படி அவரை அணுகி உள்ளனர். விஷாலை அவர்கள் தேர்வு செய்ய மற்றொரு காரணம்... விஷாலும் தங்கள் இனமான ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்பதுதான். ஆனால் விஷாலோ உஷார்பார்ட்டி.
பழம்பெரும் படநிறுவனத்துக்கு படம் பண்ணினால் அநாவசிய கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் தவிர நாம் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க மாட்டர்கள் என்ற எண்ணம் காரணமாகவோ என்னவோ, விஜயா வாஹிணி பட நிறுவனத்துக்கு தற்போது கால்ஷீட் தர இயலாது என்று சொல்லிவிட்டாராம். விஷால் கைவிரித்ததினால், விஜயா வாஹிணி நிறுவனத்தின் பார்வை அடுத்தாக, அஞ்சான் சூர்யா பக்கம் திரும்பியிருக்கிறது. சூர்யாவின் கால்ஷீட் கேட்டு சிவகுமாரை அணுகி உள்ளனர்.