Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் - விஜய் மில்டன் படம் உறுதியானது! ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார்

05 மே, 2014 - 10:14 IST
எழுத்தின் அளவு:

'ஐ' படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதரித்தார். ஆனால் அந்தப்படம் சரியாகபோவில்லை. இருப்பினும் அவருக்குள் இருந்த இயக்குநர் ஆசை ஓயவில்லை. பசங்க படத்தில் நடித்த சிறுவர்களை வைத்து 'கோலிசோடா' என்ற படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தயாரிக்கவும் செய்தார். முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி, சிறுவர்களை வைத்தும், தனது கதையை நம்பியும் இப்படத்தை இயக்கினார். ஜனவரி மாதம் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக லாபத்தையும் கொடுத்த படமாகவும் கோலிசோடா இருந்தது.


கோலிசோடா படத்திற்கு பிறகு பேசப்படும் இயக்குநரான விஜய் மில்டன் இயக்கத்தில், முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க முன்வந்தனர். அதில் முதல் இடத்தை பிடித்தவர் சீயான் விக்ரம் தான். ஐ படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கலாம் என்று இருந்த விக்ரமிற்கு, சமீபத்தில் விஜய் மில்டன் சொன்ன கதை பிடித்துப்போக, இப்போது இவர்கள் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக செய்திகள் வெளியான போதும் நேற்று தான் இது உறுதி செய்யப்பட்டது. இதனை விஜய் மில்டனே தெரிவித்தார். மேலும் இப்படத்திற்கு விக்ரம் ஜோடியாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அழகு புயலாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார். வருகிற மே 26ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in