Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உத்தம வில்லனில் கமல் தீவிரம்: விஸ்வரூபம் 2 என்னாச்சு?

04 மே, 2014 - 14:44 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படம் பல வில்லங்கங்களை தாண்டி ரிலீசாகி ஹிட்டானது. விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக வளர்ந்தது விஸ்வரூபம் 2.

இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தை திடீரென அறிவித்து அதன் படப்பிடிப்பில் தீவிரமாகி விட்டார் கமல். கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குனர், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பு. பீரியட் மற்றும் நிகழ்கால கதை கொண்ட படம். கமல் சென்ற நூற்றாண்டு கூத்து கலைஞனாகவும் நிகழ்காலத்தில் சினிமா நடிகராகவும் நடித்துள்ளார். அவரது ஆசான் கே.பாலச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

உத்தம வில்லன் தொடங்கிய பிறகு விஸ்வரூபம் 2 பற்றிய செய்திகள் அணைந்து விட்டன. விஸ்வரூபம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகள் அதிகம் இருக்கிறது. தேவையில்லாமல் மீண்டும் ஒரு பிரச்னையில் சிக்க வேண்டாம் என்ற கமல் கருவதாகவும், அதனால்தான் அதை அப்படியே வைத்து விட்டு உத்தம வில்லனில் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே மாதிரியான படத்தை அடுத்தடுத்து தர வேண்டாம் வெரைட்டி இருக்க வேண்டும் என்று கமல் கருதுகிறார். அதனால் விஸ்வரூம் 2க்கு முன்னதாக இன்னொரு படத்தை கொடுத்து விட்டால் இந்த இடைவெளி விஸ்வரூபம் 2க்கு சாதகமாக இருக்கும். இல்லாவிட்டால் விஸ்வரூபம் போன்றே இரண்டாவது பாகமும் இருக்கிறது என்ற நெகட்டிவ் விமர்சனம் வரும் அதற்காகவே உத்தம வில்லன் வேகம் எடுக்கிறது என்கிறார்கள்.

விஸ்வரூபம் 2வுக்கு இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருக்கிறது. அதற்கு பெரும் தொகை செலவாகும் அதை ஈடுகட்டவே உத்தம வில்லனில் கமல் நடிப்பதாக இன்னொரு தகவலும் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in