ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்திய படங்கள், அதுவும் பெரிய நடிகர்களின் படங்களே தியேட்டரில், ஒரு மாதம் ஓடுவதே குதிரை கொம்பாக இருந்து வரும் வேளையில், பெரிய நடிகர்கள், பெரிய நடிகைகள் யாரும் இன்றி, வெறும் சின்ன பசங்கள் நடித்து வெளியாகி, வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து, இப்போது செஞ்சுரியும் அடித்து இருக்கிறது ஒரு படம். அது ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த ''கோலி சோடா'' படம். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பசங்க படத்தில் ஸ்ரீராம், கிஷோர், பக்கடா பாண்டி, முருகேஷ் ஆகிய நான்கு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுத, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்தார்.
பெரிய நடிகர், நடிகைகளை நம்பாமல், முழுக்க முழுக்க கதையை நம்பி எடுக்கப்பட்ட இப்படம், அனைத்து தரப்பினராலும் பாராட்டு பெற்றதோடு, இந்தாண்டு வெளியாகி தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தர்களுக்கு, தியேட்டர் உரிமையாளர்களுக்கு என அனைவருக்கும் அதிக லாபத்தை கொடுத்ததும் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல கதை அமைந்தால் 100 நாள் என்ன..? 200, 300 நாட்கள் கூட ஒரு படம் ஓடும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.