சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விசாகா சிங். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ள டார்க் இஸ் பியூட்டிபுல் என்ற புதிய அமைப்பில் உறுப்பினராகி இருக்கிறார். சிவப்பு நிற பெண்கள்தான் அழகு. கறுப்பு நிற பெண்கள் அழகானவர்கள் அல்ல என்ற கருத்தை பரப்பும் விளம்பரங்களையும், அதுபோன்ற கருத்தை கொண்ட எதையும் எதிர்ப்பது இந்த அமைப்பின் நோக்கம்.
இந்த அமைப்பில் நந்திதா தாசுசும், அனு ஹாசனும் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் உள்ள அட்டக்கத்தி நந்திதா, ஐஸ்வர்யா, லட்சுமிமேனன், உள்ளிட்டவர்களையும் இந்த அமைப்பில் சேர அணுகி வருகிறார் விசாகா. முன்பு கறுப்பு நிற பெண்களை சிவப்பாக மாற்றும் ஒரு கிரீம் விளம்பரத்தில் நடித்ததற்காக வெட்கப்படுவதாக விசாகா இந்த அமைப்பின் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
டார்க் இஸ் பியூட்டிபுல் அமைப்பு வெளிநாட்டில் நடத்த இருக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். இந்த அமைப்பில் நடிகைகள், பெண்கள் அனைவரையும் இணைத்து கருப்பு நிற பெண்களுக்கு எதிரான அம்சங்களை எதிர்த்து போராட முடிவு செய்திருக்கிறார்.