‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் ஆந்திராவை பொறுத்தவரை ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகே கவனிக்கப்படுவார். ஆனால் ஒரு முதல் படம் ரிலீசுக்கு முன்பே பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறார் கேனிஷா. விமான பணிப்பெண்ணாக இருந்த கேனிஷா மாடல் உலகிலும் கலக்க... ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்தார். அதன் மூலம் கணபதி பாபா மோரியா என்ற தெலுங்கு படத்தில் வாய்ப்பு வந்தது. படம் இன்னும் சில வாரங்களில் ரிலீசாக இருக்கிறது. அதற்குள் ரசிகர் மன்றம் வைக்காத குறையாக ரசிகர்களும், போட்டிபோட்டு படங்களை வெளியிட்டு மீடியாக்களும் கேனிஷாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கேனிஷா "நடிப்பு எனக்கு சும்மா டைம் பாஸ்தான். ஐ.ஏ.எஸ் ஆகணுங்றதுதான் கனவு. எப்போ ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணுவேனோ அப்பவே நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு போய்விடுவேன்" என்ற அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புதான் அவருக்கு இன்னும் டிமாண்டை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதே 5 படங்கள் காத்திருக்கிறது. எதற்கும் ஓகே சொல்லவில்லை. கணபதி வரட்டும் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாராம்.